×

வீராணம் ஏரியில் மீன் குஞ்சுகள் வெளியேறாமல் தடுக்க நுண்வலை அமைத்து தர வேண்டும்: விவசாயிகள், மீனவர்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி பகுதியில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. சுமார் பதினேழு கிலோமீட்டர் நீளமும், ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட இந்த ஏரிதான் கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். தற்போது கோடை காலமாக இருந்தபோதிலும் அதன் முழுமையான கொள்ளளவு 47.5 அடியை எட்டியிருக்கிறது. இது விவசாயிகள், பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுபற்றி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கூறுகையில், வீராணம் ஏரியை நம்பியுள்ள சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, அறந்தாங்கி, சித்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளின் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

 இதுதவிர வீராணம் ஏரியின் உள்நாட்டு மீனவர் சங்க தலைவர் ஜபருல்லாகான் கூறும்போது, கோடையில் வீராணம் ஏரி நிரம்பியிருப்பது நல்ல விஷயம். இதனை நம்பியுள்ள மீனவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். வீராணம் ஏரியில் மீன்பிடிக்கும் அனைத்து மீனவர்களும் தங்களுக்கான உரிமத்தை முறைப்படி புதுப்பித்து அதன்படி மீன்பிடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஏரியில் மைவலை பயன்படுத்துவதை தவிர்த்து யாருக்கும் பாதிப்பு இல்லாமல் மீன்பிடிக்கவேண்டும். அரசு தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பியிருப்பதால் தமிழக மீன்வளத்துறை சார்பில் மீன்குஞ்சுகள் விடவேண்டும். அதுபோல் ஏரியில் தண்ணீர் வெளியேற்றப்படும் அனைத்து வழிகளிலும் மீன்குஞ்சுகள் வெளியேறாமல் நுண்வலை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்றார். கோடைகாலத்தில் வீராணம் ஏரி நிரம்பியிருப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரி நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 47.9 அடியாக இருந்தது. 1365.37 மில்லியன் கன அடி நீர் அணையில் உள்ளது. அணைக்கு 2,426 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே கீழணையில் இருந்து 2,682 கன அடி தண்ணீர் தொடர்ந்து வீராணம் ஏரிக்கு திறந்து விடப்படுகிறது. கீழணை நீர் மட்டம் 8.50 அடியாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mantle ,fishermen ,lake , Lion lake, fish chick, farmers, fishermen
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!